பிடாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி பிடாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பொன்னமராவதி,
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா ஒற்றைத்தேரோட்டம் மற்றும் இரட்டை தேரோட்டம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் பிடாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 1-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் இரவு அம்மன் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.
9-வது நாளையொட்டி நேற்று முன்தினம் ஒற்றைத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஒற்றைத்தேரில் அலங்கரிக்கப்பட்ட பிடாரியம்மனை எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஒற்றைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் அம்மன்குறிச்சி, ஆல வயல், கன்டியாநத்தம், கள்ளம்பட்டி, அம்மாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந் தேதி அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். அம்மன்குறிச்சி பிடாரியம்மன் கோவில் ஒற்றைத்தேரோட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.