குடிநீர் வழங்கக்கோரி நீரேற்று நிலையம் முற்றுகை: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்கக்கோரி நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை,
தோகைமலை ஒன்றியம், பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள தெலுங்கபட்டி, தெலுங்கபட்டி காலனி ஆகிய பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து ஆழ்குழாய் குடிநீரும், கூடுதலாக காவிரி கூட்டு குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்ட வறட்சியின் காரணமாக ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் குறைந்துபோனது. மேலும் அந்த பகுதிக்கு வந்த காவிரி கூட்டு குடிநீரும் கடந்த சில நாட்களாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு பல்வேறு பணிகளுக்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
முற்றுகை- சாலை மறியல்
இந்நிலையில் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், குளித்தலை மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து மதுரை மேலூர் பகுதிக்கு குடிநீர் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் தெலுங்கபட்டி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து தெலுங்கபட்டி பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரியும், நீரேற்று நிலையத்தை தெலுங்கபட்டி மற்றும் தெலுங்கபட்டி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீரேற்று நிலையத்திற்கு முன்பு உள்ள குளித்தலை-மணப்பாறை சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் அருள், தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி செயற்பொறியாளர் அருள் அரசு, குளித்தலை உதவி செயற்பொறியாளர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் பொருந்தலூர் ஊராட்சி பகுதியில் உள்ள தெலுங்கபட்டி மற்றும் தெலுங்கபட்டி காலனி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை- மணப்பாறை சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.