கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

Update: 2017-08-10 22:15 GMT
திருத்தங்கல்,

திருத்தங்கல் எஸ்.என்.புரத்தைச் சேர்ந்தவர் காளிராஜன் (வயது 30). கூலித் தொழிலாளியான இவர் வேலை முடிந்து செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஆலாவூரணியைச் சேர்ந்த முத்துக்குமார்(35) என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1500 மற்றும் கைக்கெடிகாரத்தை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். காளிராஜன் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் முத்துக்குமாரை பிடித்து திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்