உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் உண்ணாவிரதம்
திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் தமிழ், கணிதம் பாடத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும்.அனைத்து வகுப்பறைகளுக்கும் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு முன்னாள் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் முன்னாள் மாணவர்கள் திருநீலகண்டன், அழகேந்திரன், மதன்ராஜ், காளிதாஸ், நிருபன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அம்பிகாபதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.