டாஸ்மாக்கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாகையில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-10 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த செல்லூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் காடம்பாடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது49) என்பவர் மேற்பார்வையாளராகவும், நாகையை சேர்ந்த சுரேஷ் (42), மனோகர் (52) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக்கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து, வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையின் முன்பக்க ஷட்டரை, உடைத்து கடைக்குள் மர்மநபர்கள் சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்து ரூ.8 ஆயிரத்து 238 மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்