ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு 2 பேர் கைது
வேளாங்கண்ணி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது40). இவர் பரவையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற செல்வராமன் (27), கார்த்தி (28), பரவை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (26) உள்பட 4 பேர் வந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம், சாப்பிட்டதற்கான பணத்தை தர்மலிங்கம் கேட்டுள்ளார்.
அப்போது 4 பேரும் பணம் தர முடியாது என்று கூறி, கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துவிட்டு, தர்மலிங்கத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்து தர்மலிங்கம் வேளாங்கண்ணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பு என்கிற செல்வராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.