நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்,
வங்கி துறையில் நாளுக்கு நாள் வராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வராக்கடனை வசூலிப்பதற்கு பதிலாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பொதுத்துறை வங்கிகளை இணைத்தல், தனியார் மயமாக்குதல் மற்றும் ஊழியர் குறைப்பு போன்ற எதிர்மறையான நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதை கண்டித்தும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 22-ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ்குமார், மணிராஜா, உமாராணி, பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வேலைநிறுத்த போராட்டம் பற்றி விளக்கி பேசினர்.
இதில் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் வருகிற 22-ந் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.