கார்-மினி லாரி மோதல்: விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது மற்றொரு லாரி மோதியது
பெருமாநல்லூர் அருகே கார் - மினி லாரி மோதிக்கொண்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மற்றொரு லாரி மோதியது.
பெருமாநல்லூர்,
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவரும் இவரது நண்பர்களான ராஜ்குமார் (40). மகேந்திரன் (34), பிரபு (35), ஆனந்தகுமார் (34) ஆகிய 5 பேரும் முதுமலைக்கு சுற்றுலா செல்ல முடிவுசெய்தனர். இதற்காக ராஜாவின் காரில் விழுப்புரத்தில் இருந்து கோவை நோக்கி அவர்கள் 5 பேரும் புறப்பட்டு வந்தனர். காரை ஆனந்தகுமார் ஓட்டி வந்தார்.
இவர்கள் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே காளிப்பாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள பாலத்தில் வந்தபோது ஆனந்தகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை கடந்து எதிர்திசைக்கு சென்றது. அப்போது பொக்லைன் வாகன உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி மினி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இதை திருப்பத்தூரை சேர்ந்த நடராஜ் (46) என்பவர் ஓட்டி வந்தார். ஆனந்தகுமாரின் காரும் மினி லாரியும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியின் பின்பக்க 2 சக்கரங்கள் கழன்று ஓடின. அத்துடன் விபத்தில் ஆனந்தகுமார், ராஜ்குமார், மகேந்திரன், ராஜா ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். கார் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து உடனடியாக தகவல் கிடைத்ததும் பெருமாநல்லூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்தது. இதை சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த தங்கத்துரை என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் அவசர கால மருத்துவ உதவியாளரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கோவிலன் (28) என்பவர் இருந்தார்.
அவர்கள் இருவரும் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மேட்டூர் நோக்கிச் வேகமாக சென்ற லாரி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் மருத்துவ உதவியாளர் கோவிலன் படுகாயம் அடைந்தார். அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனமும் சேதம் அடைந்தது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.