கோபி அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி 2 கார்கள் கவிழ்ந்தன ஒருவர் சாவு
கோபி அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி 2 கார்கள் கவிழ்ந்தன. ஒருவர் இறந்தார். 10 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.
கடத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் சுப்பிரமணியம் (வயது 27). திருமணம் ஆகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆண்டுதோறும் சுப்பிரமணியம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் நடக்கும் குருநாதசாமி கோவில் திருவிழாவுக்கு நண்பர்களுடன் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் சரவணன் (24), சுரேஷ் (33), சிவக்குமார் (27), முஜிபூர் ரஹ்மான்( 20), சஞ்சீவ் (20) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் அந்தியூர் சென்றுகொண்டு இருந்தார். காரை சரவணன் ஓட்டினார்.
கோபி அடுத்த கருங்கரடு என்ற இடத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் கார் சென்றபோது ஒரு வளைவில் திரும்பியது, அப்போது நிலைதடுமாறி ரோட்டு ஓர பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி சுமார் 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இறந்தார்...
இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்து ‘அய்யோ அம்மா‘ என்று அலறி துடித்தார்கள். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சுப்பிரமணியம் இறந்தார். மற்ற 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் இதே இடத்தில் மற்றொரு கார் கவிழ்ந்து 5 வாலிபர்கள் படுகாயம் அடைந்தார்கள். அதன்விவரம் வருமாறு:-
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் தன்னுடைய நண்பர்கள் லட்சுமணன் (26), சித்தார்த் (27), அனீஷ் (22), விக்னேஷ்குமார் (21) ஆகியோருடன் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழாவை காண நேற்று முன்தினம் இரவு காரில் சென்றுகொண்டு இருந்தார். காரை மணிகண்டன் ஓட்டினார். நள்ளிரவு 1 மணி அளவில் கார் கோபி கருங்கரடில் சென்றபோது, நிலை தடுமாறி ஏற்கனவே விபத்து ஏற்பட்டு ஒரு கார் கவிழ்ந்து கிடக்கும் இடத்துக்கு அருகே இருந்த தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது காருக்குள் இருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்கள். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டனர். உடனே சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள். அங்கு சிகிச்சை பெற்றதும் 5 வாலிபர்களும் சென்றுவிட்டனர்.
இந்த 2 விபத்துகள் குறித்தும் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.