பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2017-08-10 22:30 GMT
நாகர்கோவில்,

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் 7–ந்தேதி சம்பளம் வழங்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க 15 அல்லது 20–ந்தேதி ஆவதாக கூறியும், எனவே 7–ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜூ, பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்