செண்பகவல்லி அணையை செப்பனிட கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் விஜிலா சத்யானந்த் எம்.பி. வலியுறுத்தல்

செண்பகவல்லி அணையை செப்பனிட கேரள அரசுக்கு தகுந்த வழிகாட்டி உத்தரவு வழங்க வேண்டும் என்று மேல்–சபையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. வலியுறுத்தினார். டெல்லி மேல்–சபையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போத

Update: 2017-08-10 20:30 GMT

புதுடெல்லி,

செண்பகவல்லி அணையை செப்பனிட கேரள அரசுக்கு தகுந்த வழிகாட்டி உத்தரவு வழங்க வேண்டும் என்று மேல்–சபையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. வலியுறுத்தினார்.

டெல்லி மேல்–சபையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

செண்பகவல்லி அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் செண்பகராமன் பிள்ளை என்பவரால் செண்பகவல்லி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, செண்பகவல்லி அணை ஆகும். இந்த அணை நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனநீர் ஆதாரமாக விளங்கியது.

1955–ம் ஆண்டு இந்த அணையில் ஏற்பட்ட சேதத்தை அப்போதைய தமிழக முதல்–அமைச்சர் காமராஜர் சரிசெய்தார். பின்னர் 1965–ம் ஆண்டு அணையில் மீண்டும் கசிவு ஏற்பட்டது. அதன்பிறகு எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்தபோது அதை சரிசெய்ய பெரும் முயற்சி மேற்கொண்டார்.

செப்பனிட வலியுறுத்தல்

செண்பகவல்லி அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபடியால் அவர்கள் கோரியபடி ரூ.10.29 லட்சம் அணையை சரிசெய்வதற்காக தமிழக அரசு செலுத்தியது. ஆனால் இன்று வரை கேரள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிவகிரி பகுதி விவசாயிகள் சங்கம் 2006–ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனுவில் கேரள அரசு அணையை சீர்செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே நெல்லை மாவட்டம் சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளின் விவசாய நிலங்களை செழிப்பாக்கும் செண்பகவல்லி அணையை செப்பனிட மத்திய நீர்வளத்துறை கேரள அரசுக்கு தகுந்த வரிகாட்டி உத்தரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜிலா சத்யானந்த் எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்