பாடும் காலிபிளவர்!
இங்கிலாந்தில் வசிக்கும் விவசாயி, டேவிட் சிம்மோன்ஸ். இவர் காலிபிளவர்கள் பாடுவதாகச் சொல்கிறார்.
‘மலைப்பாங்கான குளுமையான இடங்களில் காலிபிளவர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 3 செ.மீ. அளவுக்கு அவை வளர்கின்றன. அப்படி வளரும்போது தினமும் மெல்லிய ஒலியை எழுப்புகின்றன. இப்படிச் சத்தம் வந்தால் காலிபிளவர் வேகமாக வளர்கிறது என்று அர்த்தம்’ என்கிறார் டேவிட்.
‘முட்டைக்கோசு போன்ற தாவரங்கள் ஆபத்தைச் சந்திக்கும்போது, ஒருவித வாயுவை வெளியேற்றுகின்றன. பூச்சிகள் அமரும்போது மெல்லிய ஒலியை எழுப்புகின்றன’ என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பான் தெரிவித்திருக்கிறார். அந்த விஷயத்தையும் டேவிட் உறுதி செய்திருக்கிறார். இதுபோன்ற ஏராளமான ஆச்சரியங்கள் தாவரங் களில் இருப்பதாகவும், அதை ஒவ்வொன்றாக ஆராய்ந்துவருவதாகவும் கூறுகிறார்.