யார் நெருக்கடி கொடுத்தாலும் அதை சமாளிப்போம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
காரைக்கால் மாவட்டம் நிரவி கிழக்கு கிராம பஞ்சாயத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
காரைக்கால்,
தூய்மை இந்தியா திட்டத்தை நமது புதுச்சேரி மாநிலத்தில் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டப்பட்டது. வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் அதிகளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். மற்ற மாநிலங்களில் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் மட்டும்தான் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆனால் நமது மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.12 ஆயிரத்தை மத்திய அரசும், ரூ.8 ஆயிரத்தை மாநில அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தின்கீழ் நிரவி கிழக்கு கிராம பஞ்சாயத்து பகுதியில் கழிவறை இல்லாததாக கண்டறியப்பட்ட 162 வீடுகளில் கழிவறை கட்டிக் கொள்ள தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த 162 வீடுகளிலும் முழுமையாக கழிவறை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்திலேயே திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத கிராம பஞ்சாயத்து என்ற பெருமையை நிரவி கிழக்கு கிராம பஞ்சாயத்து பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதத்திற்குள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை கட்டி முடித்து திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக காரைக்காலை மாற்ற வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர திட்டம் தீட்டி உள்ளோம். மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுச்சேரியில் ரூ.1,850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் உள்ள நகரத்தை போன்று புதுச்சேரி மாற்றப்படும்.
காரைக்கால் மாவட்ட வளர்ச்சி மீது நாங்கள் தொடர்ந்து தனி கவனம் செலுத்தி வருகிறோம். எந்த திட்டத்திற்காக நிதியை ஒதுக்குகிறோமோ, அந்த திட்டத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட்டு வருகிறோம். இருந்தாலும் சிலர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். யார் நெருக்கடி கொடுத்தாலும் அதை சமாளிப்போம். அதற்கான பலம் எங்களுக்கு உள்ளது. நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக புதுச்சேரி மாநிலத்தை மாற்ற தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், திருமுருகன், மாவட்ட கலெக்டர் கேசவன், வட்டார வளர்ச்சி அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் மங்களாட் தினேஷ், தாசில்தார் பொய்யாத மூர்த்தி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி, நிரவி இந்தியன் வங்கி மேலாளர் அனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.