ரபாலே ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது சரமாரி தாக்குதல்
நவிமும்பை ரபாலே ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று பிற்பகல் 2.50 மணியளவில் டிக்கெட் பரிசோதகர் ரகுநாத்கோபால்(வயது56) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
மும்பை,
நவிமும்பை ரபாலே ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று பிற்பகல் 2.50 மணியளவில் டிக்கெட் பரிசோதகர் ரகுநாத்கோபால்(வயது56) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு பயணியிடம் டிக்கெட்டை கேட்டபோது, அவர் டிக்கெட்டை காண்பிக்க மறுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அந்த பயணி டிக்கெட் பரிசோதகரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். இதில், பிளாட்பாரத்தில் டிக்கெட் பரிசோதகர் ரகுநாத்கோபாலின் தலை மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்தநிலையில், அந்த பயணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிளாட்பாரத்தில் பணியில் இருந்த ரெயில்வே போலீசார் ரகுநாத்கோபாலை மீட்டு ஐரோலியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வாஷி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து டிக்கெட் பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிஓடிய பயணியை வலைவீசி தேடிவருகின்றனர்.