விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

புனே சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாய் செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2017-08-09 21:51 GMT

புனே,

புனே சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாய் செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த நிஷாந்த் மற்றும் அவருடன் வந்த பெண் ஹர்ஷா ஆகியோரின் உடைமைகளில் இருந்த சிற்றுண்டி உணவான உப்மா பார்சலில் யூரோ மற்றும் அமெரிக்க டாலர் ஆகிய வெளிநாட்டு பணம் அதிகளவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமாக அந்த பணத்தை துபாய்க்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செம்பூரை சேர்ந்த ஹர்ஷா மற்றும் நாகோ தானேவை சேர்ந்த நிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்