பெண் பயணி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர் கைது

மும்பை மரோல் பகுதியை சேர்ந்த 30 வயது தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், வாடகை காரில் பரேலுக்கு வந்து கொண்டிருந்தார்.

Update: 2017-08-09 21:46 GMT

மும்பை,

மும்பை மரோல் பகுதியை சேர்ந்த 30 வயது தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், வாடகை காரில் பரேலுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் வாடகை காரின் முன்பக்கத்தில் டிரைவர் இருக்கை அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அந்த கார் சிவாஜி பார்க் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென டிரைவர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்டு உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே டிரைவரிடம் காரை நிறுத்தும்படி கூறிவிட்டு கீழே இறங்கினார்.

பின்னர் இதுபற்றி சிவாஜி பார்க் போலீசில் அந்த கார் பதிவு எண்ணுடன் வந்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த பெண் முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாடகை கார் டிரைவர் பெயர் அருண் திவாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்