ஓசூரில் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-08-09 22:45 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் வட்ட மைய பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தின்னூர் பட்டு வளாகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமேஷ்பாபு, இணை செயலாளர் கோவிந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். இதில், தேவராஜ், பெர்னாட், திம்மராஜ், கருப்பசாமி, சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு மாறுதலின்போது தொலைதூரங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் மற்றும் விருப்ப மாறுதல் கேட்கும் அனைவருக்கும் பணி மாறுதலை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், செயற்குழு உறுப்பினர் மகாதேவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்