கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மாற்றப்படுவதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
அரியலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரி அலு வலகம் மாற்றப்படுவதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அரியலூர்,
அரியலூர் அருகேயுள்ள நொச்சிக்குளம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் தற்போது ரசுலாபுரத்தில் உள்ளது. ராமலிங்கபுரம், மலத்தாங்குளம், உசேன்நகரம் கிராம மக்கள் ரசுலாபுரம் வந்து இந்த அலுவலகத்தில் இருந்து அரசிடம் தாங்கள் விண்ணப்பித்த சான்றிதழை பெற்று வந்தனர். இந்த நிலையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தினை நொச்சிக்குளத்திற்கு மாற்று வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை கண்டித்து ரசுலாபுரம் கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியாண்டி தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.
பேச்சு வார்த்தை
இதையறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.