168 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருவாளந்துறையில் நடந்த மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 168 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருவாளந்துறையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் பேசுகையில், வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான கல்லாற்றின் குறுக்கே காரியனூர் - லெட்சுமாபுரத்தை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் திருவாளந்துறை - கீழ்கல்பூண்டி ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கல்லாற்றின் குறுக்கே ஓர் உயர்மட்ட பாலம் என இப்பகுதி மக்களின் நலனுக்காக, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று மேற்கண்ட பாலங்களை இப்பகுதி மக்களுக்காக பெற்றுத்தந்துள்ளேன். தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.
இதில் கலெக்டர் சாந்தா பேசுகையில், இந்த மனுநீதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் 98 மனுக்கள் பெறப்பட்டு அதில் 32 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 14 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 52 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் 168 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரத்து 826 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவாளந்துறையில் நடந்த மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன