பெண் பயணியிடம் ரூ.30 ஆயிரம், செல்போன் திருட்டு
பெண் பயணியிடம் ரூ.30 ஆயிரம், செல்போன் திருட்டு
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே உள்ள மேலவாண்டான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி வசந்தா (வயது 42). இவர் நேற்று மாலை கறம்பக்குடி சென்று வங்கியில் பணம் எடுத்து கொண்டும், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொண்டும், ஒரு தனியார் பஸ்சில் புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். வங்கியில் எடுத்த ரூ.30 ஆயிரம், விலையுர்ந்த செல்போன் ஆகியவற்றை ஒரு மணிபர்சில் வைத்து பொருட்கள் வைத்திருந்த ஒரு பையில் வைத்திருந்தார். பின்னர் புதுப்பட்டியில் பஸ்சில் இருந்து இறங்கிவுடன் பையில் வைத்திருந்த மணிபர்சை காணததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.