செய்யூர் அருகே தாய் திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
செய்யூர் அருகே தாய் திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த பாக்குவான்சேரியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் குமார் (வயது 23). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாயே என்று குமாரின் தாய் திட்டி உள்ளார்.
இதனால் மனவருத்தம் அடைந்த குமார் பூச்சிமருந்து (விஷம்) குடித்து மயங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இழந்தார். இந்த தற்கொலை குறித்து குமாரின் சித்தப்பா பக்தவச்சலம் செய்யூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் செய்யூர் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.