குண்டர் தடுப்பு சட்டத்தில் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் ராஜீவ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்கிற போகி கிருஷ்ணன் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்த இவர் மண்ணிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆவார்.
வண்டலூர்,
இவர் மீது ஓட்டேரி போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்ணிவாக்கத்தில் புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஏற்கனவே சிறையில் உள்ள கிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான உத்தரவு நகலை போலீசார் புழல் சிறைத்துறை அதிகாரியிடம் அளித்தனர்.