சீனப்பொருட்களுக்கு தடை வியாபாரிகள் சங்க பேரவை- இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சீனப்பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும், ஜி.எஸ்.டி. வரி குறித்து பரப்பப்படும் அவதூறு பிரசாரத்தை முறியடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட
சென்னை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன நாட்டு படைகள் நமது எல்லையில் அத்துமீறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். கம்யூனிஸ்டுகள் நக்சலைட்டுகள் மூலமாக சீனாவுக்கு ஆதரவு அளிக்கிறார் கள். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் சீன நாட்டில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்படுவதை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும். ஜி.எஸ்.டி. வரியின் பயன்கள் குறித்து, வியாபாரிகள் சங்க பேரவையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்” என்றார்.