திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் மீண்டும் முற்றுகை

திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-09 20:45 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 2 மாதங்களுக்குள் அந்த கடையை மூடுவதாக உறுதியளித்துள்ளனர்.

டாஸ்மாக் கடை

திருச்செந்தூரை அடுத்த அடைக்கலாபுரம்– ஆறுமுகநேரி மெயின் ரோட்டில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு கொளுத்தும் வெயிலில் அமர்ந்து மீண்டும் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

முற்றுகையிட்டவர்களிடம், தூத்துக்குடி கலால் துறை உதவி ஆணையர் விஜயா, டாஸ்மாக் உதவி மேலாளர் முத்துராமலிங்கம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா (திருச்செந்தூர்), சிவலிங்கம் (ஆறுமுகநேரி), வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 மாதத்தில் மூடு முடிவு

அப்போது 2 மாதங்களுக்குள் (வருகிற அக்டோபர் 9–ந்தேதிக்குள்) டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதாகவும், அடைக்கலாபுரத்தில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடைபெறும் நாட்களில் டாஸ்மாக் கடையை மூடுவதாகவும், அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்