பார்வதிபுரம் மேம்பால பணி தீவிரம்: கே.பி. ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டும்பணி தீவிரமாக நடைபெற்றுவருவதால், நாகர்கோவில் கே.பி. ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையில் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து அந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.இந்த நிலையில் பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து பால்பண்ணை நோக்கி செல்லும் கே.பி. ரோட்டில் நேற்று மேம்பால பணிகள் தொடங்கின. இதற்காக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தக்கலையில் இருந்து வடசேரி வரும் வாகனங்கள் பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் வழியாக செல்கின்றன. இதுபோல் தக்கலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் வந்து, பின்னர் கிறிஸ்துநகர் பிரதான சாலை வழியாக பால்பண்ணை சந்திப்பில் இணைந்து கலெக்டர் அலுவலக சாலைக்கு செல்கின்றன.
அறிவிப்பு பலகை
இதைப்போன்று செட்டிகுளம் மார்க்கத்தில் இருந்து தக்கலை செல்ல வேண்டிய வாகனங்கள் கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி பெண்கள் பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம் சந்திப்பு வழியாக செல்கின்றன.
வடசேரியில் இருந்து தக்கலை செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம் சந்திப்பு வழியாக சென்றன.
போக்குவரத்து மாற்றத்தையொட்டி வாகன ஓட்டிகள் குழப்பம் அடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு சந்திப்புகளிலும் வாகனங்கள் செல்ல வேண்டிய வழி விவரம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து சந்திப்புகளிலும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.