விபத்தில் மாணவ-மாணவிகள் காயம் எதிரொலி: விதிகளை மீறி இயக்கிய 9 ஆட்டோக்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் நேற்று முன்தினம் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நேற்று காலை கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், குண்டுமணி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிகளை மீறி அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற 9 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த சரக்கு ஆட்டோவின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.