குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

உப்பிலியபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-08-08 23:00 GMT
உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் தெற்கு தெரு கடைசி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் நேற்று மாலை கோட்டப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்தனர்.

அவர்கள், தங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக வரவில்லை என்று கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, தங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி செயலாளரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால், அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் எம்.பெருமாள் இல்லாததால், அவர்கள் மனு கொடுக்காமலேயே திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்