வேலூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-08-08 22:15 GMT
வேலூர்,

இந்திய குடியரசு கட்சியின் (ஜி.மூர்த்தி பிரிவு) சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பி.எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அதிரூபன் வரவேற்றார். மாநில தலைவர் எம்.ஜி.நாகமணி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், தமிழக விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சத்தியா நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்