களக்காட்டில் பழமையான மரம் சாய்ந்து வீடுகள் சேதம்
களக்காட்டில் பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. இதில் 5 வீடுகள், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன.
களக்காடு,
களக்காட்டில் பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. இதில் 5 வீடுகள், மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன. மின்கம்பம் சரிந்து நொறுங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பழமையான இலுப்பை மரம்
நெல்லை மாவட்டம் களக்காடு பஸ்நிலையம் கீழத்தெருவில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலுப்பை மரம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அந்த மரம் சாய்ந்து பயங்கர சத்தத்துடன் அங்குள்ள வீடுகள் மீது விழுந்தது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக நினைத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
மரம் முறிந்து விழுந்ததில் பூமணி (86), நல்லமுத்து (56), நம்பிநாச்சியார் (55), மனுவேல் (50), அருளம்மாள் (50) ஆகிய 5 பேரது வீடுகள் சேதமடைந்தன. பூமணியும், நல்லமுத்துவும் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். வேலுமயில் (60) என்பவரது வீட்டு வாசலில் மரம் விழுந்தது. எனவே வீட்டுக்குள் இருந்த 4 பேர் வெளிவர முடியாமல் அவதிப்பட்டனர். செல்லத்துரை (25) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்து அமுக்கியது.
அங்குள்ள நீர்த்தேக்க தொட்டியின் மீதும் மரம் விழுந்தது. இதில் நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்தது. மின்கம்பம் மீது மரம் முறிந்து விழுந்ததால் மின்கம்பம் சரிந்து விழுந்து நொறுங்கியது. மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வினியோகம் பாதிப்பு
இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து சென்று வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட 4 பேரை மீட்டனர். மின்வாரிய ஊழியர்களும் வந்து மின்சாரத்தை துண்டித்தனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்துள்ளன.
பகல் நேரத்தில் மரம் விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரத்தை அப்புறப்படுத்தி, விரைவில் அப்பகுதிக்கு மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.