தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்த வேண்டும் அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை

தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-07 23:17 GMT

புதுச்சேரி,

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பார்க்க சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கந்தசாமி, கவர்னர் கிரண்பெடியை தாக்கி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:–

அமைச்சர் கந்தசாமி தொடர்ந்து என் மீது தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதன் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார். இது போன்ற செயல்களை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். விமான சேவை திட்டத்தில் என்ன நடந்தது. அதில் முறைகேடு எதுவும் நடந்ததா? என்பது பற்றி முறையாக ஆய்வு செய்து அனைத்து விவரங்களும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். விமான சேவை தொடர்பாக வந்த கோப்புகளை கவர்னர் அலுவலகம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை.

புதுவையில் செலவிடப்படும் பலகோடி ரூபாய் பணத்தை உரிய முறையில் செலவிடுவதற்காக கவர்னர் அலுவலகம் தலையிடுகிறது. மேலும் இது பல்வேறு விசாரணைக்குள்ளாகக்கூடிய ஒன்றாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்