கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் விவசாயி தற்கொலைக்கு முயற்சி
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.;
கிருஷ்ணகிரி,
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். விவசாயி. இவர் நேற்று காலை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று அவர் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள்.
தொடர்ந்து அவர் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அதில் பயிர் செய்ய விடாமல் எனது உறவினர் தடுக்கிறார். இதை தட்டி கேட்ட எனது தாயை தாக்கினார். மேலும் அவர் நிலம் அருகில் வரக்கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.