புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகை
செந்துறை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள நெடுங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் விவசாய நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இதையறிந்த சிறுகடம்பூர் கிராம மக்கள் அங்கு வந்து அந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கதிரவன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் அந்த டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சூறையாட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காமராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டனர்.
இதனை கண்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடினர். இன்று (செவ்வாய்க்கிழமை) வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.