சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு

சாதிசான்றிதழ் வழங்க வேண்டும் என மாணவ, மாணவிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2017-08-07 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 317 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத் தனர். அதில், எங்கள் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் ஆங்காங்கே அந்த நீர் தேங்கி நிற்கிறது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா காரை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் அளித்த மனுவில், சாலையோரமாக வித்தை காட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து எங்களது பெற்றோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். எங்களுக்கு சாதிசான்றிதழ் இல்லாததால் கல்வித்துறை சலுகைகளை பெறமுடிய வில்லை. எனவே எங்களுக்கு சாதிசான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா ராமநத்தத்தை சேர்ந்த சிலர் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த நாகூர்மீரான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் லெப்பைக்குடிகாட்டில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பதில் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் பாஸ்கரன், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்-தணிக்கை) பாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்