செங்கத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

செங்கம்,
செங்கத்தை அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த 3 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்கக் கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று பக்கிரிப்பாளையத்தில் உள்ள திருவண்ணாமலையில் இருந்த பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.