தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
மானூரை அடுத்த பள்ளமடை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டையை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கூலியாக 120 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு அரசு சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நாங்கள் மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தோம். கடந்த சில மாதங்களாக எங்களுக்கு வேலை வழங்கவில்லை. எனவே எங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. துலுக்கர்குளத்தை சேர்ந்த பொது மக்கள், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கலெக்டரிடம் புகார் கூறி மனு கொடுத்தனர்.
மேலபுத்தனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு பாறைக்குளத்தை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் கடந்த 10 ஆண்டுகளாக குடி தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். எனவே நிரந்தரமாக குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நெல்லை மாநகராட்சி 10-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள தாமரைகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் உஸ்மான்கான் தலைமையில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து நெல்லை கொக்குகிரளம் செல்லும் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. மது பிரியர்கள், மதுகுடித்து விட்டு சாலையில் வந்து வாகன ஓட்டிகளிடமும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளிடமும் தகராறு செய்து வருகிறார்கள். இதனால் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள ஜோதிபுரத்தில் புதிதாக மதுக்கடை திறந்துள்ளதாக தெரிகிறது. இந்த கடையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
ராதாபுரம் தாலுகா உறுமன்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக நாங்கள் அந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வருகிறார்கள். அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊருக்கு பாதியப்பட்ட இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிவில் கடந்த 4-ந் தேதி கொடை விழா நடந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் எங்கள் ஊரை சேர்ந்த சிலர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கைகளை ரத்து செய்து, எங்கள் ஊருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
நாங்குநேரிஅருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், டோனாவூர் சேகர கிறிஸ்தவ ஆலயம் மிகவும் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டும் விழா கொண்டாடுவதற்காக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர். ஆலய வளாகத்துக்குள் ஒலி பெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர்கள், கீழ நத்தம் பகுதியில் 32 பேருக்கு வீடு கட்டுவதற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அங்கு பாறைகள் இருப்பதால், வேறு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.