ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய முதியவர் தலை நசுங்கி சாவு
ஆலங்குளம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய முதியவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.;
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது குறிப்பன்குளம். இந்த ஊர் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65), விவசாயி. இவர் தனது ஊரில் இருந்து குறிப்பன்குளத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் மீண்டும் குறிப்பன்குளத்துக்கு செல்வதற்காக ஆலங்குளம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ரெட்டியார்பட்டிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் சுப்பிரமணியன் ஏறினார். பஸ் புறப்பட்டுச் சென்றது.
வழக்கமாக குருவன்கோட்டை, கீழபட்டமுடையார்புரம், குறிப்பன்குளம் செல்லும் அந்த பஸ், அந்த பகுதியில் பாலம் வேலை நடப்பதால் சிவலார்குளம், அய்யனார்குளம் ஊர்களை சுற்றித்தான் குறிப்பன்குளம் செல்லும்.
சுப்பிரமணியன் ஏறிய பஸ், ஆலங்குளம் பழைய பஸ் நிலையத்தை தாண்டி நெல்லை ரோட்டில் சென்றது. இதை கவனித்த சுப்பிரமணியன், பஸ் மாறி ஏறி விட்டோமோ என்று நினைத்து ஓடும் பஸ்சில்இருந்து இறங்கியதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய அவர் பஸ்சுக்கு அடியில் விழுந்தார். அவரது தலையில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சுப்பிரமணியன் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.