காயல்குடி ஆற்றை சீரமைக்க களம் இறங்கிய இளைஞர்கள்
மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆன காயல்குடி ஆறு தற்போது நீர்வரத்துக்கு வழியின்றி கிடக்கிறது. அதனை மீட்டெடுக்க இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர்.
தாயில்பட்டி,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் செண்பகத்தோப்பு பகுதியில் உற்பத்தியாகி சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ஓடிவெம்பக்கோட்டை அணையில் காயல்குடி ஆறு கலந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுமுழுவதும் இதில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதன்மூலம் நதிக்குடி, புலிப்பாரைப்பட்டி, பழையாபுரம், ஆத்தூர், காக்கிவாடன்பட்டி, உப்புப்பட்டி, எதிர்க்கோட்டை, கிளியம்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, குண்டாயிருப்பு. கே. லட்சுமியாபுரம். கங்கர்செவல் ஆகிய கிராமங்களை சேர்ந்த நன்செய், புன்செய் நிலங்கள் பாசனவசதி பெற்று வந்தன.
மழை குறைவால் நாளடைவில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதோடு தூர்ந்தும் போயின. நீர்வரத்தும் நின்று போனது. இங்கிருந்து தண்ணீர் சென்ற கோபாலசமுத்திரம் கண்மாய் உள்ளிட்ட சில கண்மாய்களும் வறண்டு பாசன பகுதிகள் தரிசாக கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து போனது. இப்போது அந்தப்பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
சீமைக்கருவேல மரங்கள் மண்டி மெள்ள மெள்ள மறைந்து வரும் அந்த ஆற்றினை சீரமைக்க மாதாங்கோவில் பட்டியை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் அனைவரும் ஒன்று திரண்டு ஆற்றினை தூர்வாரி கரையினை பலப்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் இதற்காக நிதி திரட்டியும் வருகின்றனர். களம் இறங்கியுள்ள இளைஞர் பட்டாளத்துக்கு பொது மக்களும் உதவி செய்து வருகின்றனர். ஆற்றை மீட்டெடுத்து முன்பு போல் தண்ணீர் வர முனைப்புடன் களம் இறங்கி இருப்பதாகவும், விடுவோம் என்று அந்த பகுதி இளைஞர்கள் உறுதி படத்தெரிவித்தனர்.