‘ஹெல்மெட்’ அணிந்த நிலையிலும் தலை நசுங்கி வியாபாரி பலி

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சரோஜ் (வயது 41). துணி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கடைகளுக்கு துணிகளை விற்பனை செய்து வந்தார்.

Update: 2017-08-07 22:15 GMT

ஆலந்தூர்,

நேற்று முன்தினம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு துணிகளை விற்பனை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் அருகே ராஜீவ்காந்தி சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அதில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் ஹெல்மெட்டுடன் சேர்ந்து தலை நசுங்கி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்