சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை கிண்டியில் இருந்து, பூந்தமல்லி நோக்கி தண்ணீர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சென்று கொண்டு இருந்தது. லாரியை பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

Update: 2017-08-07 23:00 GMT

ஆலந்தூர்,

கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து பரங்கிமலை பட்ரோடை நோக்கி லாரி செல்லும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதி கோயம்பேடு செல்லும் பாதையில் தலைகுப்புற விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் காயம் அடைந்த டிரைவர் பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வாகனத்தை மீட்கும் பணி நடைபெற்றது. 2 மணி நேரத்தில் வாகனம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்