நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: 8 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. ரூ.10 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் நேரு நகர் உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட கூரைவீடுகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மாசிலாமணி மனைவி பச்சையம்மாள் (வயது 55). கூரைவீட்டில் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து காற்றின் வேகத்தால் மளமளவென தீ பரவி அருகில் இருந்த ராதா (65), பழனி (50), இவருடைய மகன் அகோரமூர்த்தி (32). செல்வராஜ் மனைவி பானுமதி (45), விஜய் (34), கலைச்செல்வி (30), ஜெயசுதா (37) உள்ளிட்ட 8் பேரின் கூரை வீடுகளிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. நள்ளிரவில் வீட்டில் பெண்கள், குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருப்பதற்கு அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணம், துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் பாரதி எம்.எல்.ஏ., தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியின் கீழ் 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
இதேபோல் அரசு சார்பில் தாசில்தார் பாலமுருகன் பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம், மண்எண்ணெய், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பாரதி எம்.எல்.ஏ., தாசில்தார் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கும் கல்விச்சான்றிதழ், ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை விரைவில் வழங்க கேட்டுக் கொண்டார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரவை செயலாளர் மணி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கடேசன், மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.