சிமெண்டு மூட்டைகளை விற்று மது குடித்த தந்தை அடித்து கொலை மகன் உள்பட 2 பேர் கைது
கந்தர்வகோட்டை அருகே சிமெண்டு மூட்டைகளை விற்று மது குடித்த தந்தையை அடித்து கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரைபட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவர் தஞ்சாவூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு முருகானந்தம், ஆனந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் ஆனந்த் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள ரவிச்சந்திரன் கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீடு கட்டுவதற்காக முருகானந்தம் வாங்கி வைத்திருந்த சிமெண்டு மூட்டைகளில் சில மூட்டைகளை எடுத்து விற்று அதில் கிடைத்த பணத்தில் ரவிச்சந்திரன் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த முருகானந்தம் மற்றும் அவருடைய உறவினர் ஒரத்தநாட்டை சேர்ந்த பரமசிவம் மகன் ஸ்ரீதர்(21) ஆகியோர் ரவிச்சந்திரனிடம் அது பற்றி கேட்டனர். அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் தனது தந்தை ரவிச்சந்திரன் தலையின் பின் பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து முருகானந்தத்தை பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார், ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகானந்தத்தின் உறவினர் ஸ்ரீதரையும் போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காஜாமொய்தீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.