நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: அ.தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: அ.தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

Update: 2017-08-06 23:00 GMT
கரூர்,

கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது பண்டரிநாதன் கோவில். இந்த கோவிலுக்குரிய நிலத்தை அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்ததாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர். இந்த நிலையில் கோரிக்கை தொடர்பாக உண்ணாவிரதம் நடத்தப்படும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் 6-ந் தேதி அறிவித்தப்படி உண்ணாவிரதம் நடைபெறும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்படி பெரியகுளத்துப்பாளையத்தில் பகவதியம்மன் கோவில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த அம்மையப்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத பந்தலில் பொதுமக்கள் சிலர் பஜனை பாடல்களை பாடினர். மாலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 

மேலும் செய்திகள்