ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றபோது அவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கி சிதறின.
இந்த சம்பவத்தை கண்டித்தும், கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பாக நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் சுப.சோமு, சுஜாதா மற்றும் ராஜாநசீர், சிவாஜி சண்முகம், வக்கீல் சரவணன், மகேந்திரன், சேவாதளம் முரளி, ஜெகதீஸ்வரி ஆகிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.