தாறுமாறாக ஓடிய கார், 2 வாகனங்கள் மீது மோதியது: 3 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்
மத்தூர் டவுனில் தாறுமாறாக ஓடிய கார், 2 வாகனங்கள் மீது மோதியதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மண்டியா,
மத்தூர் டவுனில் தாறுமாறாக ஓடிய கார், 2 வாகனங்கள் மீது மோதியதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார், 2 வாகனங்களின் மீது மோதியதுமண்டியா மாவட்டம் மத்தூர் டவுன் கோலி சர்க்கிள் பகுதியில் நேற்று காலை ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர தடுப்பு சுவரின் மீது ஏறி மற்றொரு புறத்திற்கு சென்றது. இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கார், சரக்கு வேன் மீது தாறுமாறாக ஓடிய கார் மோதியது.
இந்த விபத்தில் 2 கார்கள், சரக்கு வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 கார்கள், சரக்கு வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 பேர் பலிஅப்போது தாறுமாறாக ஓடிய காரில் பயணம் செய்த 2 பேரும், சரக்கு வேனை ஓட்டி வந்தவரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மற்றொரு காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் பலியானவர்கள் காரில் பயணம் செய்த மைசூரு டவுன் காந்திநகரை சேர்ந்த சகீல் அகமது(வயது 28), மைசூரு உதயகிரியை சேர்ந்த பாரூக்(29), சரக்கு வேன் டிரைவரான மத்தூரை சேர்ந்த சாகர்(30) என்பது தெரிந்தது.
படுகாயம் அடைந்தவர்கள் மைசூருவை சேர்ந்த சகீம், தீலிப் என்பதும் தெரிந்தது.
விசாரணைஇதையடுத்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.