காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-08-06 22:45 GMT
தென்காசி,

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிநாடார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராம்மோகன், சிவராமகிருஷ்ணன், திருஞானம், செலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர தலைவர்கள் காதர் முகைதீன், பால்ராஜ், ராஜூ, மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் எஸ்.எம்.வி.துரை, காங்கிரஸ் கமிட்டி சிறப்பு அழைப்பாளர் காங்கிரஸ் பொன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்