ராகுல்காந்தி கார் மீது கல்வீச்சு மும்பை, தானேயில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட குஜராத் மாநிலத்திற்கு சென்றார்.
மும்பை,
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட குஜராத் மாநிலத்திற்கு சென்றார்.
இவர் லால்சவுக் பகுதியில் இருந்து தனேராவிற்கு சென்று கொண்டு இருந்த போது மர்ம ஆசாமி ஒருவர் ராகுல்காந்தியின் கார் மீது கல்வீசி தாக்கினார். இதில் அவரது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் கார் மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து நேற்று மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாதர் மேற்கில் ரெயில் நிலையம் எதிரே மும்பை இளைஞர் காங்கிரசினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல தானேயில் காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.