ஈரோட்டில் விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு உதவிய நீதிபதி
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த கண் டாக்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஈரோடு,
பின்னர் அவர் சென்னை செல்வதற்காக நேற்று காலை தனது காரில் கோவை விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். ஈரோடு வாய்க்கால்மேடு பெருந்துறை ரோடு பகுதியில் அவர் கார் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்து கிடந்தார். இதைப்பார்த்ததும் நீதிபதி நாகமுத்து உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார்.
பின்னர் அவரே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் கோவை நோக்கி புறப்பட்டார். விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நீதிபதி நாகமுத்து செய்த உதவியை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.