காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

Update: 2017-08-05 22:00 GMT

ஹாசன்,

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

காதல்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கும்பரடி கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 17). இவருடைய பக்கத்து கிராமமான ஹார்லே கிராமத்தை சேர்ந்தவர் சகானா (16). இவர்கள் 2 பேரும் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். பக்கத்து, பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேரும் சிறுவயது முதலே பழகி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அழுகிய நிலையில் பிணமாக....

இதனால், காதல் ஜோடி இருவரும் மனமுடைந்து காணப்பட்டனர். மேலும் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர்கள், சகானாவையும், அருணையும் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் தனித்தனியே சக்லேஷ்புரா புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சக்லேஷ்புரா அருகே பாகே கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் ஒரு மரத்தில் ஆணும், பெண்ணும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக நேற்று சக்லேஷ்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தற்கொலை

பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சக்லேஷ்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மாயமான அருண், சகானா என்பதும், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து சக்லேஷ்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்