பால்குட ஊர்வலம்
கோனேரி கங்கையம்மன் கோவில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ளது கோனேரி கங்கையம்மன் கோவில். ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. 108 கைகளுடன் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் வீதிஉலா நடந்தது. விழாவையொட்டி கருக்காத்தம்மன் கோவிலில் இருந்து 208 பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக கோனேரி கங்கையம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு 108 பேருக்கு திருப்போரூர் எம்.எல்.ஏ. கோதண்டபாணி வேட்டி, சேலைகளை வழங்கினார்.