காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2017-08-05 22:45 GMT
புதுக்கோட்டை,

குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி காரின் மீது மர்மநபர் ஒருவர் கற்களை வீசினார். இதில் அவரது காரின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். இதனை கண்டித்து புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை.திவ்யநாதன், சின்னராசு, ஆரோக்கியசாமி, இப்ராகிம்பாபு சூர்யா.பழனியப்பன், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்